பலமான தொழிலாளர் மற்றும் தொழிற்தள சட்டங்கள் பலமான குடும்பங்களை உருவாக்கும்!

பலமான தொழிலாளர் மற்றும் தொழிற்தள சட்டங்கள் பலமான குடும்பங்களை உருவாக்கும்!

மேம்படுத்தபட்ட 148 முன்வரவினால் எமக்கு ஏற்படும் நன்மைகள் தொடர்பான ஆவணத்தைப் தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே அழுத்தவும்.

தனியார் மயமாக்குதலினால் ஏற்படும் செலவுகளும் அரசு சேவைகளின் பலன்களும்தனியார் மயமாக்குதலினால் ஏற்படும் செலவுகளும் அரசு சேவைகளின் பலன்களும்
தரமான அரச சேவைகள் உங்கள் சமூகத்தை பாதுகாப்பானதாகவும் வளமானதாகும் பேண உதவும்.  ஆனால் அந்த சேவைகள் தனியார் மயமாக்கப்படுவதால் சேவைகளின் தரம் குறைவதோடு மக்களுக்கு ஏற்படும் செலவும் அதிகரிக்கும் என்பதை நாம் பல வேளைகளில் கண்டுள்ளோம்.  அவற்றில் சில:

  • தனியார் மயமாக்கப்பட்ட ஹைட்ரோ சேவையினால் மக்களுக்கான கட்டணம் 300 விகிதம் அதிகரித்ததோடு மட்டுமன்றி ஒன்ராறியோ மாகாணத்துக்கு 500 மில்லியன் டொலர் வருவாய் ஒவ்வொரு வருடமும் இழக்கப்பட்டுள்ளது
  • தனியார் மயமாக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனைக் கூடங்களினால் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மருத்துவமனைகளில் நடாத்தப்படுபவற்றை விட அதிக காலம் எடுப்பதோடு 50 விகிதம் அதிக செலவானதாகவும் வருடாந்தம் எமக்கு 200 மில்லியன் டொலர்கள் கூடுதல் செலவீனத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
  • தனியார் மயமாக்கப்பட்ட பனிப்பொழிவு அகற்றும் நிறுவனங்களினால் நெடுஞ்சாலைகள் இருமடங்கு நேரம் பனித் தேக்கம் உள்ளனவையாகவும் ஆபத்தானதாகவும் ஆக்கப்பட்டுள்ளன.(இரண்டு மணிநேரத்துக்குப் பதிலாக நான்கு மணிநேரம்).  அதற்கான செலவும் அதிகரித்துள்ளது.

முன்னர் தனியார் மயமாக்கப்பட்ட சேவைகள் தற்போது அரச சேவைகளாக மாற்றப்பட்டதன் பலனை ஒன்ராறியோ மற்றும் கனடாவில் சில பகுதிகளில் உள்ள சமூகங்கள் அனுபவித்து வருகின்றன என்பதுதான் எமக்கு நல்லதோர் செய்தியாக தற்போது உள்ளது.

  • அடித்தள மக்களின் போராட்டம் ரொறன்ரோ ஹைட்ரோ நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நகரபிதா ஜோன் ரோறி அவர்களின் திட்டத்தைக் கைவிடும்படி செய்தது.  ரொறன்ரோ ஹைட்ரோவை விற்கும் திட்டம் நிறைவேறி இருந்தால் ரொறன்ரோவின் நடப்பு நிதி 50 மில்லியன் டொலர்கள் வரை குறைந்திருக்கும்.  இதன் தொடர்ச்சியாக நகரம் மக்களுக்கு வழங்கும் சேவைகளில் பாதிப்போ அல்லது மேலதிக வரியோ எமக்கு விதிக்கப்பட்டிருக்கும்.  இப்படியான மேலும் ஒரு போராட்டத்தின் பலனாகவே, யங் வீதிக்கு கிழக்கே குப்பை வெளியேற்றும் பணியைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை ஜோன் ரோறி கைவிட வேண்டி வந்தது.  இதன் மூலமும் மேலும் பண விரயத்தையும் நூற்றுக்கணக்கான தரமான வேலைவாய்ப்புக்களையும் நாம் இழந்திருக்கக் கூடும்.  நகரத்தின் மீள்பயன்பாடு (recycle) திட்டத்துக்குரிய வளங்கள் குறைக்கப்பட்டிருக்கும்
  • தங்களின் தண்ணீர் சுத்தப்படுத்தும் திட்டத்தை அரச பணியாக்ககியதன் மூலம் ஹமில்ட்டன் நகரம் 5 மில்லியன் டொலர்கள் வரை சேமித்துள்ளது.
  • ஒட்டாவாவில் அரச கழிவகற்றும் சேவையைப் பெறும் மக்கள் தனியார் மயமாக்கப்பட்ட கழிவகற்றும் சேவையைப் பெறும் மக்களிலும் பார்க்க இருமடங்கு திருப்தி அடைந்துள்ளார்கள் என ஒரு அறிக்கையில் அறியப்பட்டுள்ளது.

அரச சேவைகள் தனியார் மயமாக்கப்படாமல் காப்பதன் மூலம் அதன் பயனை எமது சமூகங்கள் நீண்ட காலத்துக்கு பெற்றுக் கொள்ளும். எங்களால் உதவ முடியும்.

www.weownit.ca  |  www.facebook.com/weownitcanada  |  @weownitca

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *