தொழிற்சங்கங்களைப் பற்றி/About Unions

தொழிற்சங்கங்களைப் பற்றி…

பல்லாயிரக்கணக்கான கனடியர்கள் தொழிற்சங்கங்களில் அங்கத்தவர்களாக உள்ளனர். நீதியான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகவும்இ அனைவருக்கும் உகந்ததான ஒரு நகரத்தை கட்டியெழுப்புவதற்காகவும்இ தங்களின் திறன்களைக் கொண்டு ஒவ்வொரு வகையான தொழிற்துறையிலும் தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிபுரிந்து வருகின்றனர்

கனடாவின் மிகப் பெரும் நகரமான ரொறன்ரோ பெரும்பாகத்தின் மாறிவரும் யதார்த்தமான பண்புகளை உள்வாங்குவதில்; தொழிற்சங்கங்கள் முக்கியமான பங்கை வகிக்கின்றன.

கனடாவின் பூர்வீகக் குடிகளினால் ரொறன்ரோ (ஒன்று கூடும் இடம்) எனப் பெயர் சூட்டப்பட்டது முதல் இந்த நகரம் குடிவரவாளர்களாலும் அவர்களது வழித்தோன்றல்களாலுமே கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு தலைமுறை குடிவரவாளர்களும் இங்கு புது சந்தர்ப்பங்களையும் ஒரு முக்கியமான பாடத்தையும் கற்கின்றனர்: அதாவதுஇ தங்களுக்கும் தங்களது குடும்பங்கள் மற்றும் சமூகத்தவரது வாழ்க்கைத் தரத்தை இங்கு உயர்த்திக் கொள்வதற்கு தொழிற்சங்கங்ககள் முக்கியமானது என்பதே ஆகும்.

இங்கு வீதிகளையும் கால்வாய்களையும் குடைந்து உருவாக்கிய ஐயர்லாந்து நாட்டவருக்கும்இ ஸ்படைனா வீதியில் ஆடைத் தொழிலாளிகளாக இருந்த யூத இனத்தவர்களுக்கும்இ கட்டுமானத் தொழிலாளர்களாக இருந்த இத்தாலி நாட்டவர்களுக்கும்இ பிலிப்பினோ மற்றும் மேற்கு இந்திய பராமரிப்பு தொழிலாளர்களுக்கும் மற்றும் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்து எமது பொருளாதாரத்தின் அடிக்கற்களாக விளங்கும் அனைத்துப் புதிய கனடியர்களுக்கும் இதுவே உண்மையாக உள்ளது. இங்கு தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த வரும் குடும்பங்கள் அனைத்துக்கும் உரிய யதார்த்தம் இதுவே.

ஒரு குறிப்பிட்ட தொழிற்திறன் உள்ளவர்கள் தங்களின் வியாபாரத்துக்கு உரிய ஒரு ஊதியத்தை நிர்ணயிக்கும் பொருட்டு ஒன்று சேர்ந்து முதன் முதலில் தொழிற்சங்கங்களை உருவாக்கினர். வேலை அதிகம் இல்லாத நேரங்களில் தங்களது முதலாளிகள் தங்களது ஊதியத்தைக் குறைப்பதைத் தடுக்கும் வகையிலேயே அவர்களின் போராட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அவை மிக விரைவில் முன்னேற்றமடைந்து குறைந்த பணி நேரங்கள்இ கூடுதலான பாதுகாப்புஇ அனைவருக்கும் பொதுவான கல்வி மற்றும் தமக்கான முடிவுகளை தாங்களே தீர்மானிக்கக் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காக போராடி வந்தன.

இரண்டாம் உலகப் போரின் பின்னர்இ நாட்டுக்காகப் போராடியவர்கள் தம்மை உள்நாட்டில் சரியாக நடத்துமாறு கோரிக்கைளை வைத்தனர். பாரிய தொழிற்தளங்களில் தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கான உரிமை வேண்டி வேண்டி பாரிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடாத்தப்பட்டன. ரொறன்ரோ மனித உரிமைகளுக்கான தொழிற்குழு(வுழசழவெழ டுயடிழரச ஊழஅஅவைவநந ழn ர்ரஅயn சுiபாவள) முதலாளிகள்இ காணி உரிமையாளர்கள்இ உணவக உரிமையாளர்கள்இ மற்றும் சில நேரங்களில் தொழிற்சங்கங்களையும்இ எதிர்த்து இனப்பாகுபாட்டுக்கு எதிராக குரல்கொடுத்தனர். அத்தோடு கனடாவின் பாகுபாடான குடிவரவுக் கொள்கைகள் மாற்றப்பட்டு மனித உரிமை சட்டங்கள் உருவாக்கப்படும் பரப்புரை செய்தன.

பின்னர்இ பணியிடங்களில் பெண்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் பெண்களுக்கான சமூக மாற்றங்களுக்கு ஆதரவாகவும் சம உரிமைக்காகவும் தொழிற்சங்கங்கள் குரல் கொடுத்து வந்தன. தென்னாப்பிரிக்காவின் கறுப்பின அழிப்புஇ காலனித்துவம் போன்றவற்றுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்ததோடுஇ அமைதிக்காகவும் குரல்கொடுத்துஇ அகதிகளை வரவேற்று ஒரு நீதியான சமூகத்தை உருவாக்கி இந்த நகரத்தின் அடித்தளத்தை வலுவாக இட்டனர் தொழிற்சங்கத்தினர். இவை அனைத்துக்குமான எண்ணக்கரு என்னவெனில் ஒன்று பட்டு நாம் முன்னேறும் ஒவ்வொரு அடியும் ஒரு தனிமனித முன்னேற்ற்த்தை விட அதிகமான வலுவுடன் இருக்கும் என்பதோடு அதிக காலம் நீடித்து நிற்கும் என்பதுமாகும்.

தொழிற்சங்கங்களின் செயற்பாடுகள் என்ன?

ஒரு பணியிடத்தில் பணிபுரிபவர் தன்னைப் பணியில் அமர்த்துபவருடான பிரச்சனைகளை சந்திக்குமிடத்து அவருக்கான ஒன்றிணைந்த ஒரு குரலாக ஒலிப்பதுவே ஒரு தொழிற்சங்கத்த்pன் அடிப்படை செயலாகக் கொள்ளளலாம். தொழிலாளர்களுக்கும் முதலாளிக்கும் இடையில் சலுகைகள்இ விடுமுறைநாட்கள்இ ஊதியம் போன்றவை உள்ளடக்கிய பணி தொடர்பான நிபந்தனைகள் ஒரு எழுத்து மூல ஆவணமாகக் எழுதப்படும். தொழிற்சங்க உறுப்பினர்கள் தங்களுக்கு முக்கியமான விடயங்களைக் முடிவு செய்ததன் பின்னர் பேரம்பேசும் குழு (Bargaining Unit) அந்த குறிப்பிட்ட தொழில் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும். 95 வீதமான நேரங்களில் வேலை நிறுத்தப் போராட்டம் அல்லது பூரண கதவடைப்பு போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் ஒரு ஒப்பந்தத்துக்கு வரக்கூடிய சூழ்நிலை இப் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏற்படும்.

பொருளாதாரம் வலுவாக உள்ள நேரங்களில் தொழிலாளர்கள் கருத்தொற்றுமை கொண்டிருந்தால் அவர்களது பணி ஒப்பந்தங்களில் கூடுதல் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதலான நேரங்களில்இ அப்படியான சலுகைகள் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் மற்றவர்களுக்கும் போய்ச் சேருவதோடு மட்டுமல்லாமல் வேறு நிறுவனங்களில் அதே மாதிரியான பணி பரிபவர்களுக்கும் சென்றடையும். அதன் பலனாகத்தான் தொழில் தரங்கள் இன்று படிப்படியாக அதிகரித்துள்ளதோடு கடந்த காலங்களில் அறியப்படாத பல சலுகைகளையும் இன்று பணியாளர்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலை தோன்றுகிறது.

பணியிடங்களில் பணியாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்பதும் தொழிற்சங்கங்களின் மற்றுமொரு நோக்காக உள்ளது. நாங்கள் பணிபுரியும் இடங்களில் பயன்படுத்தும் பொருட்களினால் நமக்கு ஏற்படுத்தப்படும் உடல் பாதிப்புக்கள் பற்றி அறிந்திருத்தல்இ பாதுகாப்பற்ற பணியை நிராகரித்தலுக்கான உரிமைஇ மற்றும் பணியிடப் பாதுகாப்புக் குழுவை உருவாக்குதல் போன்ற உரிமைகள் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் அரசியல் பரப்புரை ஊடாகவே பணியிடங்களில் நிறுவப்பட்டன. இவை தொழிற்சங்கங்கள் உள்ள பணியிடங்கள் மட்டுமல்லாத தொழிற்சங்கங்கள் அற்ற பணியிடங்களிலும் மாற்றத்தை உருவாக்குவதற்கு ஏதுவாக இருந்துள்ளன.

ஒரு கூட்டு ஒப்பந்தம் (Collective Agreement)உருவாக்கப்பட்டாலும் கூட அது கடைப்பிடிக்கப்படும் என உறுதியாகக் கூறிவிட முடியாது. அந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் முதலாளியினால் நடைமுறைக்கு உட்படுத்தப்படுகின்றதா என்பதையும் தொழிற்சங்கங்கள் உறுதி செய்யும். குறைகளை அடையாளப்படுத்தும் முறைமை (Complaint Process) மூலம் இந்த ஒப்பந்த மீறல்களை அடையாளப்படுத்திக் கொள்ளலாம். சில வேளைகளில் பணிகளை வெளி நிறுவனங்களுக்கு கொடுப்பதை எதிர்த்து தொழிற்சங்கங்கள் தங்களது அங்கத்தவர்களை ஒன்றிணைத்து போராட்டங்களை நடாத்த வேண்டியும் ஏற்படலாம். இன்னும் சில சமயங்களில் உலகின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளை மதித்து நடக்குமாறு பாரிய தொழில் நிறுவனங்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் பாரிய பிரச்சாரங்களையும் நடாத்த வேண்டி ஏற்படலாம்.

எமது சமூகத்தில் முக்கியமான பொருளாதார முடிவுகளை எடுப்பவர்கள் ஒரு பணியாளரின் பெறுமதியை அறிந்து அதற்குரிய அங்கீகாரத்தை வழங்குவதற்கான செயற்திட்டத்தை மேற்கொள்ளுவதே தொழிற்சங்கங்களின் அடிப்படை நோக்காகும். தொழிற்சங்கங்கள் அரசசார்பற்றதாகவே இயங்கும். அனைவருக்கும் பொதுவான மருத்துவப் பராமரிப்புஇ பொருளதார தகுதிநிலைக்கு ஏற்ப வீட்டு வசதிஇ போன்ற விடயங்களை உள்ளடக்கிய சமூக நீதி தொடர்பான விடயங்களில் ஒருமித்த அரசியல் சிந்தனை உள்ள கட்சிகளை இணைத்து வலுவான சக்தியாக செயற்படும்.

தொழிற்சங்கங்களின் நன்மைகள்

தொழிற்சங்கத்தை ஒன்றுதிரட்டுவதன் மூலம் ஊதிய உயர்வு ஏற்படுத்தலாம் என்பதை விட நாம் பணிபுரியும் பணியிடங்கள் எம்மை சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடாத்த வேண்டும் என்றே நாம் எதிர்பார்க்கின்றோம். தொழிற்சங்கங்கள் அற்றவர்களை விட தொழிற்சங்கங்கள் உள்ள நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கனடாவில் சராரியாக ஒரு மணி நேரத்துக்கு 5 டொலர்கள் அதிகமாகப் பெறுகிறார்கள். ஆனால் இதை நடைமுறைப் படுத்துவதற்கு எமது முன்னைய தலைமுறைகள் தங்களது நேரத்தையும் வலுவையும் வழங்கி உறுதியான தொழிற்சங்கங்களைக் கட்டி அமைத்துள்ளனர். தொழிற்சங்கங்கள் உள்ள பணியிடங்களில் எல்லாம் கூடுதலான ஊதியம் மற்றும் தொழில் புரியும் சூழ்நிலை சிறந்ததாக இருக்கும் எனக் கூறிவிட இயலாது. ஆனால் நிச்சயமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் தொழிற்தரத்தை முன்னேற்றுவதில் தொழிற்சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன எனக் கூறினால் அது மிகையாகாது. கூடுதலான நேரங்களில்தொழிற்சங்கங்கள் அற்ற தொழில் நிறுவனங்களும் தங்களது ஊதியத்தை அதிகரித்து ஏறக்குறைய தொழிற்சங்க ஒப்பந்தங்களில் உள்ள ஊதியத் தொகைக்கு ஏற்றாற்போல் வழங்கி வருகின்றன.

தொழிற்சங்கங்களில் அற்ற நிலையில் உங்களுக்கான உரிமை என்ன?

உங்கள் பணியிடத்துக்குள் சென்ற அடுத்த கணமே தங்கள் அனைத்து உரிமைகளையும் இழந்து விடும் நிலையிலேயே கனடியர்கள் உள்ளனர். உங்களுக்குத் தேவையான நேரங்களில் எங்காவது செல்வதற்கோஇ உங்கள் எண்ணக்கருக்களை எழுதுவதற்கோஇ இன்னும் சில நேரங்களில் கழிப்பறைக்குச் செல்வதற்குக் கூட உரிமை அற்றே நீங்கள் இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஒன்று கூடுவதற்கோ அல்லது உங்கள் கருத்துக்களைப் பயமற்றுப் பரிமாறுவதற்கோ உங்களுக்கு உள்ள உரிமை மறுக்கப்படுகின்றது. ஒரு தொழிற்சங்கம் அற்ற நிலையில்இ உங்கள் முதலாளி உங்களுக்கான அனைத்து முடிவுகளை எடுக்கின்றார். சில தொழில் தரங்கள் நிலைநாட்டப்பட வேண்டிய தேவை அவருக்கு இருந்தாலும் கூடுதலான முதலாளிகள் இந்த அடிப்படை உரிமைகளையும் உதாசீனம் செய்பவர்களாகவே உள்ளனர். உலகமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் அதிகரிக்கும் நிலையில் வேலையின் அழுத்தங்களும் அதிகரிக்கும். இந்த சூழ்நிiயில் தனி மனித பணியிட உரிமை என்பது இன்னமும் அதிகமாக மழுங்கடிக்கப்பட்டு விடும்.

ஒருவர் எப்படி தொழிற்சங்கங்களில் இணையலாம்?

ஏற்கனவே தொழிற்சங்கங்கள் உள்ள நிறுவனத்தில் ஒரு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதன் மூலம் கூடுதலானவர்கள் தொழிற்சங்க அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் ஒவ்வொரு வருடமும் தொழிற்சங்கங்கள் அற்ற ஆயிரக்கணக்கானோர் தங்களுக்கென ஒரு தொழிற்சங்கத்தை ஒன்றிணைந்து உருவாக்கிக் கொள்கின்றனர்.

ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் தொழிற்சங்கத்தை ஆதரித்த காரணத்துக்காக அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை அந்த நிறுவனம் எடுப்பது சட்டமற்றது என ஒன்ராறியோ சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு பணியிடத்தில் தங்கெளுக்கென ஒரு தொழிற்சங்கம் தேவை என பணியாளர்கள் முடிவு செய்யுமிடத்து தங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு தொழிற்சங்கத்தை குறிப்பிட்டு ஒரு அட்டையில் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்வர். போதுமான அட்டைகள் பெறப்படுமிடத்துஇ ஒன்ராறியோ தொழிலுறவு பேணல் சபையினால் (ழுவெயசழை டுயடிழரச சுநடயவழைளெ டீழயசன) வாக்கெடுப்பு நடாத்தப்படும். கூடுதலானவர்கள் தொழிற்சங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால் தொழிற்சங்கம் அங்கு அங்கீகரிக்கப்படும். இதன்படி அந்த நிறுவனம் அந்த தொழிற்சங்கத்தை அங்கீகரித்து அதனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பணியிட சலுகைகள்இ சூழ்நிலைகள் தொடர்பான ஒரு ஒப்பந்தத்துக்கு உட்படும்.

சிலநேரங்களில்இ தொழிலாளர்கள் ஒன்றுபட்டு செயற்படுவதற்கு எதிரான அத்தனை செயற்பாடுகளிலும் நிறுவனங்கள் ஈடுபடும். ஆனால் தொழிலாளர்கள் ஒற்றுமை இழக்காமல்இ துணிச்சலாகச் செயற்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம். எம்மால் நிச்சயம் இது முடியும். வரலாறு எமக்குக் கற்றுத் தந்துள்ளது. நாம் ஒன்று படுவதன் மூலம் பேரம்பேசும் வலு ஏற்படும். மாறாகப்இ பிரிந்து நின்றால் நாம் உரிமைகளுக்காகக் கையேந்தும் நிலையே ஏற்படும்.

ஒரு நீதியான சமூகத்துக்கான அடித்தளம்

பணியிடத்தில் மரியாதை. பாதுகாப்பான பணியிட சூழல். கண்ணியமான வருமானம். சுயமரியாதையுடன் பணியிலிருந்து ஓய்வு பெறக்கூடிய நிலை. அடிப்படையான சமூக நீதி. உறுதியான அரசாங்க சேவைகள். அடுத்த தலைமுறையினர் சிறந்த வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளுவதற்கான ஒரு சந்தர்ப்பம். இதுவே ரொறன்ரோ தொழிலாளர் இயக்கத்தின் தலைமைப் பண்புகளாகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் எமது தொழிற்சங்கப் பெண்களும் ஆண்களும் எமக்காக விட்டுச் சென்ற அடித்தளம் இதுவே.

பாரிய தொழில்நிறுவனங்கள் தங்களது வல்லாதிக்கத்தைப் பயன்படுத்தி மனிதர்களுக்கான கருத்துப் பகிர்வுகள் அனைத்தையும் வர்த்தமாக்கி வரும் இன்றைய காலப்பகுதியில்இ ஒரு சமன்பாட்டை உருவாக்க வேண்டிய தேவை சமூகத்துக்கு உள்ளது. இந்த சமன்பாட்டை உருவாக்கக் கூடிய மிகச் சிறந்த வலு உழைக்கும் மக்கள் ஒன்று படுவதன் மூலமே ஏற்படும். அதுவே எங்களின் தொழிலாளர் இயக்கத்தின் எண்ணக்கரு: உங்கள் எதிர்காலத்தில் ஒரு திடமான மாற்றத்தை ஏற்படுத்துதல்.